அனிதாவின் மரணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை: டிடிவி தினகரன்

அனிதாவின் மரணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை: டிடிவி தினகரன்

அனிதாவின் மரணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை: டிடிவி தினகரன்
Published on

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்திய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நீட் தேர்வை எதிர்த்து போராடிய அன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி  மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளாரே என்று அனிதாவின் துணிச்சலை எண்ணி மகிழ்ந்திருந்தேன். அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com