டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை: ட்விட்டர் பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
Published on

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி.செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் நடிகர் மயில்சாமியும் அவருக்கு சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, “ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார்!” என ட்விட்டரில் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த ட்விட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com