டிரெண்டிங்
“கூட்டணி குறித்து அதிமுகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” தமாகா விடியல் சேகர்
“கூட்டணி குறித்து அதிமுகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” தமாகா விடியல் சேகர்
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதிமுகவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் எஸ்.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து தமாகா சார்பில் அதிமுகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி குறித்து பேசும் அதிகாரம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு மட்டுமே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், கூட்டணி குறித்து யாரிடமும் பேச தன்னிடம் ஜி.கே.வாசன் இதுவரை சொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.