எம்ஜிஆரின் தீவிர ரசிகன் நான்: ஸ்டாலின் அதிரடி

எம்ஜிஆரின் தீவிர ரசிகன் நான்: ஸ்டாலின் அதிரடி
எம்ஜிஆரின் தீவிர ரசிகன் நான்: ஸ்டாலின் அதிரடி

எம்ஜிஆரின் தீவிர ரசிகன் என்றும் அவரது திறமைகளை குறைத்து மதிப்பிடவில்லை என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பசுமலைக்கோட்டையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அவரது புகழை பேசாமல் திமுகவை பற்றி பேசுவது ஊழலை மறைக்கவே என்று கூறினார். 

மேலும், ஸ்டாலின் பேசுகையில், “தற்போது உள்ள ஆட்சியை கவிழ்க்கவில்லை என திமுகவினர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்களை பற்றிதான் சிந்தித்து வருகிறது. டெங்கு குறித்து நான் கூறியது பொய் என்றால், வழக்கு தொடரலாம்; ஆதாரத்துடன்தான் நான் குற்றம்சாட்டுகிறேன். அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து பேசி என் தகுதியை குறைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com