பென்ஷனுக்கு ஆசைப்பட்டு இறந்த மனைவியை 5 வருடம் ஃப்ரீசருக்குள் வைத்த கணவர்.. அதிர்ந்துபோன நீதிமன்றம்!

பென்ஷனுக்கு ஆசைப்பட்டு 5 வருடங்களுக்கு முன்பாகவே இறந்த மனைவியை ஃப்ரீசருக்குள் வைத்து மோசடியில் ஈடுபட்ட நார்வேயைச் சேர்ந்த நபருக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்
freezer
freezerNGMPC22 - 158

நார்வே நாட்டைச் சேர்ந்த 57 மதிக்கத்தக்க நபர் செய்த செயலை கேட்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதியே சற்று நேரம் உறைந்துபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2018ம் ஆண்டு தனது மனைவி(60) உயிரிழந்துவிட்ட நிலையில், பென்ஷன் பணத்தை தொடர்ந்து பெற சதித்திட்டம் தீட்டியுள்ளார் அந்த நபர். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்து, இறுதியாக மனைவியின் சடலத்தை வீட்டின் ஃப்ரீசருக்குள் வைத்துவிட்டு தன்னுடைய வாழ்க்கையை சாதாரணமாக தொடந்துள்ளார்.

NGMPC22 - 158

உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உங்கள் மனைவி எங்கே என்று கேட்கும்போதெல்லாம் “அவள் வெளியே சென்றிருக்கிறாள், தூங்கிக்கொண்டு இருக்கிறாள்” என்று கதைகளை அளந்துவிட்டுள்ளார்.

ஆண்டுகள் பல உருண்டோடிய நிலையில், காணாமல் போனவருக்கு என்ன ஆனது என்று சந்தேகிக்க தொடங்கிய உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்த போலீஸாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

freezer
புதிய தலைமுறை Live Updates - September 14, 2023
NGMPC22 - 158

போலீஸார் வீட்டுக்கு சென்று சோதித்ததில், 60வது வயதுடைய மூதாட்டி 2018லேயே இறந்துவிட்டதும், இத்தனை ஆண்டுகளாக சடலம் ஃப்ரீசரில் வைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரிக்கையில், கடைகளில் பயன்படுத்தும் ஃப்ரீசரை வீட்டில் பயன்படுத்திய கணவர், அதே பெட்டியில் உணவையில் பதப்படுத்தி சாப்பிட்ட பகீர் தகவல் கிடைத்துள்ளது.

5 ஆண்டுகளில் சுமார் 9 லட்சம் ரூபாய் பென்ஷனை போலி ஆவணங்களை கொண்டு கணவன் மோசடியாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசடியில் ஈடுபட்டதற்காக கணவனுக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com