மனைவியை பிரிந்து மனஉளைச்சலில் இருந்த கணவன் எடுத்த விபரீத முடிவு... காஞ்சிபுரத்தில் சோகம்
4 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியுடன் பிரிந்து வாழ்வதை தாங்க முடியாமல் தையல்காரர் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருணாச்சல நகர் பகுதியில் வசிப்பவர் முருகன். தையல் கடை நடத்தி வரும் இவருக்கு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் பையனும் 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை முருகன், சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீட்டு கொண்டார்.
முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வருவதற்குள் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.