மாங்காடு: கணவருக்காக மனைவியும், மனைவிக்காக கணவரும் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு!

மாங்காடு: கணவருக்காக மனைவியும், மனைவிக்காக கணவரும் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு!

மாங்காடு: கணவருக்காக மனைவியும், மனைவிக்காக கணவரும் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பு!
Published on

மாங்காடு நகராட்சியில் மனைவிக்கு ஆதரவாக கணவனும், கணவனுக்கு ஆதரவாக மனைவியும் வாக்கு சேகரித்தனர். அவர்கள் கூட்டமாக சென்று பரப்புரை செய்யக்கூடாது என பறக்கும்படையினர் அறிவுறுத்தினர். 

மாங்காடு நகராட்சியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 9வது வார்டில் மதிமுகவை சேர்ந்த முருகனும், 6வது வார்டில் அவரது மனைவி சுமதியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கணவன், மனைவி இருவரும் கட்சி ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள இஸ்திரி கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டும், வீடுகளுக்குள் சென்று குடும்ப தலைவிகளுக்கு டீ போட்டு கொடுத்தும், முக கவசம் அணியாமல் வீட்டில் இருப்பவர்கள் இடத்தில் முக கவசம் அணியுமாறு முக கவசம் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவருக்கு ஆதரவாக மனைவியும், மனைவிக்கு ஆதரவாக கணவனும் இணைந்து வார்டுகளில் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்கு சேகரிப்பின்போது அதிக ஆட்களை அழைத்து செல்லக்கூடாது குறைந்த அளவு ஆட்களை வைத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என அந்தப் பகுதியில் வந்த பறக்கும் படை அதிகாரிகள் வேட்பாளர்களிடம் அறிவுறுத்திவிட்டு வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் ஏதாவது வைத்துள்ளார்களா என்பதை ஆய்வுசெய்து விட்டுச்சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com