பாஜகவுக்கு எதிரான பேரணி... குலுங்கியது பாட்னா!

பாஜகவுக்கு எதிரான பேரணி... குலுங்கியது பாட்னா!

பாஜகவுக்கு எதிரான பேரணி... குலுங்கியது பாட்னா!
Published on

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மத்திய பாஜக அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில், பாட்னாவில் லாலு பிரசாத் அழைப்பு விடுத்த பேரணியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் அந்நகரமே குலுங்கியது.

அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டோம் என அறைகூவல் விடுக்கும் வகையில், இந்தக் கூட்டத்திற்கு லாலு பிரசாத் ஏற்பாடு செய்திருந்தார். இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவர் சரத் யாதவ், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அலி அன்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்கள் தவிர, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பாபுலால் மராண்டி ,தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் தாரிக் அன்வர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அரசியலில் அணி சேர்க்கும் நோக்கிலான இந்தப் பேரணிக்கு கிடைத்துள்ள ஆதரவால் லாலு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் கூட்டத்தில் பங்கேற்ற லாலு பிரசாத்தின் மகனும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி, மம்தா பானர்ஜியின் காலைத் தொட்டு வணங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com