“என்னையா சீண்டுற!” பாம்பு மீட்பரிடம் தலையை தூக்கி சீறிய ராஜநாகம் - வைரலாகும் பகீர் வீடியோ!

“என்னையா சீண்டுற!” பாம்பு மீட்பரிடம் தலையை தூக்கி சீறிய ராஜநாகம் - வைரலாகும் பகீர் வீடியோ!
“என்னையா சீண்டுற!” பாம்பு மீட்பரிடம் தலையை தூக்கி சீறிய ராஜநாகம் - வைரலாகும் பகீர் வீடியோ!

ராஜநாகம் ஆள் உயரத்திற்கு தலையை தூக்கி  சீறிப் பார்த்ததைக் கண்டு மைக் ஹோல்ஸ்டன் ஒரு நொடி ஆடிபோய் விட்டார்.

அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள்  12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனை லாவகமாக பிடித்துச் சென்ற பாம்பு பிடிக்கும் நபரான மைக் ஹோல்ஸ்டன், அதனை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பாம்பை பாதுகாப்பாக பெட்டிக்குள் அடைக்க முற்பட்டுள்ளார்.

ராஜ நாகத்தின் வாலை பிடித்து லாவகமாக இழுத்துப்பிடித்து நிலைநிறுத்த முயற்சிக்கிறார். ஒருகட்டத்தில் அந்த ராஜநாகம் மைக் ஹோல்ஸ்டனை பார்த்து பயங்கரமாக சீறியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆள் உயரத்திற்கு தலையை தூக்கி  சீறிப் பார்த்ததைக் கண்டு  மைக் ஹோல்ஸ்டன் ஒரு நொடி ஆடிபோய் விட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அப்படியே வீடியோவில் உள்ளன.

மிகவும் விஷத்தன்மை கொண்டதாக காணப்படும் இந்த ராஜ நாகம். மிக அரிதாக தான் கண்களில் படும். கூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்டு ஒரே பாம்பு வகை ராஜ நாகம் தான். மற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில் ராஜநாகத்தின் விஷத்தன்மை மிகவும் வீரியமானது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com