”35-40 அடி ஆழத்தில் தேடினோம்” - வெற்றி துரைசாமியின் உடலை மீட்டது குறித்து மீட்புக்குழுவின் தலைவர்!

சட்லஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடலை ஒரு வாரத்திற்கும் மேலாக தேடிவந்த நிலையில், வெற்றி துரைசாமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சைதை துரைசாமி அறிக்கை விட்டிருந்தார்.
சைதை துரைசாமி
சைதை துரைசாமிPT

கடந்த வாரம் சுற்றுலாவிற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார், சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில், சட்லஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியை ஒரு வாரத்திற்கும் மேலாக தேடிவந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உடலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி அறிக்கை விட்டிருந்தார்.

இவ்வறிக்கைக்குப் பிறகு ஸ்கூபா வீரர்களின் உதவியோடு சட்லஜ் நதியின் பாறை இடுக்கில் சிக்கி இருந்த வெற்றி துரைசாமியின் உடலானது வெளியில் எடுக்கப்பட்டது. பிறகு சட்டப்படி அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டுது. பிறகு கண்ணம்மாபேட்டையில் இறுதிசடங்குகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், வெற்றிதுரைசாமியின் உடலை கண்டெடுத்த மீட்புகுழுவினர், நம் செய்தியாளார்களிடம் பேசும்பொழுது, “விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திலேயும், நதிக்கு அடியில் சுமார் 35-40 அடி ஆழத்திலும் தேடிவந்தோம். ஆனால் 7 கிலோமீட்டர்க்கு பிறகு ஒரு பாறையின் இடையில் இவரின் உடல் எங்களுக்கு கிடைத்தது. ” என்று கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com