தக்காளி இருந்தா போதும்... உங்க முகம் இனி பளபளக்கும்.! இந்த டிப்ஸ படிங்க..

தக்காளி இருந்தா போதும்... உங்க முகம் இனி பளபளக்கும்.! இந்த டிப்ஸ படிங்க..
தக்காளி இருந்தா போதும்... உங்க முகம் இனி பளபளக்கும்.! இந்த டிப்ஸ படிங்க..

தோலை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

முகத்தில் எண்ணெய்த்தன்மையை தக்க வைக்கும் தக்காளி

உங்கள் தோலானது எளிதாக காய்ந்து போகும் தன்மை கொண்டதாக இருந்தால் தக்காளியைத் துண்டாக நறுக்கி அதனை முகத்தில் தேய்த்து 5 முதல் 10 நிமிடம் வரை காத்திருந்து சாதாரண தண்ணீரில் கழுவலாம். தக்காளி உங்கள் தோலின் எண்ணெய் தன்மையை தக்க வைப்பதோடு, தோலை சுத்தமாக வைப்பதற்கு உதவி புரிகிறது.

கரும்புள்ளிகள் மற்றும் நுண்துளைகளை சுருக்கும் தக்காளி

முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், தக்காளிச் சாறை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து  சாதரண நீரில் முகத்தில் கழுவலாம்.  முகத்தின் நுண் துளைகளில் ஊடேறும் சாறு, முகத்தின் நுண்துளைகள் திறப்பதை தடுக்கிறது. கரும்புள்ளிகள் அளவையும் அது சுறுக்குகிறது.

சருமம் பளபளக்க உதவும் தக்காளி

காலை எழுந்த உடன் ஒரு தக்காளியுடன் , 2 டேபிள் டீஸ்பூன் எண்ணெய் உறிஞ்சு மண் மற்றும் ஒரு டேபிள் டீஸ்பூன் புதினா சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவலாம். அதன் பின்னர் அவை காய்ந்த உடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இவை முகத்தை புத்துணர்வோடு இருக்க வைப்பதுடன், தோலை மிருதுவாகவும் மாற்றும்.

அதே போல தக்காளியுடன் மோரைக்கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் கழுவலாம். இவை சூரிய ஒளி மூலம் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும். அதே போல முதுமையில் ஏற்படும் தோல் சார்ந்த பிரச்னைகளுக்கும் தக்காளி தீர்வாக இருக்கிறது.

 courtesy:https://www.indiatoday.in/information/story/how-to-use-tomatoes-for-glowing-skin-effective-home-remedies-1735146-2020-10-31

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com