வரகு புலாவ் செய்வது எப்படி ? மணக்கட்டும் 'சன்டே'

வரகு புலாவ் செய்வது எப்படி ? மணக்கட்டும் 'சன்டே'
வரகு புலாவ் செய்வது எப்படி ? மணக்கட்டும் 'சன்டே'

திருமணம் ஆகி தனிக்குடித்தனம் போகும் பெண்களுக்கு அம்மாக்கள் கொடுக்கும் ஒரு விலை மதிப்பில்லாத சீதனம், சமையல் துணுக்குகள் தான். அது சரி, கொஞ்சமாச்சும் சமையல் தெரிந்தால் துணுக்குகள் சொல்லலாம், சமையலே தெரியாதவர்களுக்கு? டைரி போட்டு எழுதிக்கொடுப்பது எல்லாம் அந்தக் காலம். 'என் பொண்ணு விவரம் தெரிஞ்சவ, இன்டர்நெட் பாத்து சமைச்சு பொழச்சுக்குவா' என்று பெண்ணை பெற்ற அம்மாக்கள் கெத்து காட்ட  ஆரம்பிச்சுட்டாங்க. அட ஆமாங்க! சமையலில் அரிச்சுவடியில் ஆரம்பிச்சு அட்டை டூ அட்டை வரை சமையலில் வறுத்து தாளிக்க விவரங்கள் தரும் இணையதளங்கள் நிறைய வந்துவிட்டன. அப்படி இணையத்தில் http://www.rakskitchen.net/- இல் சற்று பார்த்தபோது, இந்த ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் சமைக்க ஒரு ரெசிப்பி கிடைச்சுது, அத எப்படி சமைக்கிறதுனு பார்க்கலாம். 

வரகு புலாவ் (2 பேருக்கு செய்ய) 

என்ன தேவை?

வரகு - 1 கப் 

தண்ணீர் - 1 & 1/2 கப் 

கேரட், பீன்ஸ், பட்டாணி  - 1 கப் 

வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 

பச்சை மிளகாய் - 2

புதினா இலை - 12

உப்பு - தேவைக்கேற்ப 

தாளிக்க 

நெய் - 2 மேஜைக்கரண்டி 

பட்டை - 1

சோம்பு - 1 தேக்கரண்டி 

பிரியாணி இலை - 1

எப்படி செய்வது?

ஒரு சிறிய குக்கரை சூடு செய்து, பட்டை, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து, வதக்கவும். வெங்காயம் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு  விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். பொடியாக நறுக்கிய காய்களை சேர்த்து, புதினா மற்றும், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.  வரகை, களைந்து, தண்ணீரை வடித்து காயுடன் சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும். தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வெங்காய தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com