”முட்டையை இப்படி சாப்பிட்டால் BP & கொலஸ்ட்ரால்தான் வரும், ” : எச்சரிக்கும் டயட் டாக்டர்ஸ்!

”முட்டையை இப்படி சாப்பிட்டால் BP & கொலஸ்ட்ரால்தான் வரும், ” : எச்சரிக்கும் டயட் டாக்டர்ஸ்!

”முட்டையை இப்படி சாப்பிட்டால் BP & கொலஸ்ட்ரால்தான் வரும், ” : எச்சரிக்கும் டயட் டாக்டர்ஸ்!
Published on

புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த முட்டைகளை பொறியல், ஆம்லெட், ஆஃப் பாயில் என பல வழிகளில் காலை உணவாக எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்களும் முட்டையை காலை உணவாக எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்கள்.

எடையை இழப்பதற்கும் பசியின்மையில் இருப்பவர்களுக்கும், இன்சுலின் பிரச்னை உள்ளவர்கள் என அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் முதல் உணவு முட்டையாகத்தான் இருக்கும். ஆனால் முட்டைகளை சரியான முறையில்தான் உட்கொள்கிறீர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் ஒருவர் முட்டையை தவறான விதத்தில் உண்பதால் நன்மையை விட தீமையே அதிகம் ஏற்படலாம். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

அதன்படி, உடலுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளும்போது அவை மனநிறைவைத் தூண்டுவதாக உள்ளன. இருப்பினும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் இணைத்தால், அதன் நோக்கமே தோல்வியடைந்து, ஆரோக்கியமானதாக பரிந்துரைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமற்றதாகிவிடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் முட்டைகளை உண்பது எப்படி ஆரோக்கியத்தை கெடுக்கும்?

இங்கிலிஷ் பிரேக் ஃபார்ஸ்ட் என சொல்லக் கூடிய முட்டையுடன் சாசேஜஸ் அல்லது பேக்கான் துண்டுகளோ, ஹாஷ் பிரவுன் போன்ற உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்குடன் சாப்பிடுவது கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் நிறைந்தவையாக இருக்கும்.

ஆனால் உண்மையில் இதுப்போன்ற உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள், சோடியம் அதிகளவில் இருப்பதால் இரத்த அழுத்தமும், கொலஸ்ட்ராலும் அதிகரிக்கச் செய்யும்.

டையட் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் கொண்ட உணவில் நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் 20 கிராமுக்கு மேல் இருக்கக்கூடாது என எச்சரிக்கிறார்கள். பேக்கானில் 12.6 கிராம் கலோரிகளை கொடுக்கிறது எனக் கூறியுள்ளார்கள்.

ஆரோக்கியமான முட்டையை எப்படி அதிகம் பயன்படுத்துவது?

முட்டைகளை உட்கொள்வதன் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, அவற்றை சரியான உணவுகளுடன் இணைப்பது முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது, ஆலிவ் ஆயிலில் சமைத்து, வெண்ணெய் பழங்கள், முழு தானியங்களுடன் டோஸ்ட் செய்தோ அல்லது சில வறுத்த காய்கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com