"வாக்குப்பெட்டிகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள்" - வீடியோ பதிவுகளை வெளியிட்ட அகிலேஷ்!

"வாக்குப்பெட்டிகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள்" - வீடியோ பதிவுகளை வெளியிட்ட அகிலேஷ்!
"வாக்குப்பெட்டிகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள்" - வீடியோ பதிவுகளை வெளியிட்ட அகிலேஷ்!

"வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், வாக்கு இயந்திரங்கள் திருடு போனது எப்படி?" என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வரும் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் அமைந்திருந்த வாக்குச்சாவடியில் இருந்து சில வாக்குப்பெட்டிகள் இன்று மாயமாகின. வாக்குகளை முறைகேடாக மாற்றுவதற்காகவே, இந்த வாக்குப்பெட்டிகளை ஆளும் பாஜகவினர் எடுத்துச் சென்றுள்ளதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த சூழலில், வாக்குப்பெட்டிகளை மர்ம நபர்கள் சிலர் திருடி செல்லும் வீடியோவை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் செய்தியாளர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஓரிரு தினங்களே உள்ளன. அப்படி இருக்கும் சமயத்தில், வாக்கு இயந்திரங்கள் திருடி போயிருப்பது எப்படி? இத்தனை போலீஸாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புக்கு இருக்கும் போது, ஆளுங்கட்சியினரை தவிர வேறு யாரால் இந்த துணிகர செயலை செய்ய முடியும்? இனி காவல்துறையினரை நம்ப முடியாது. நமது வாக்குகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை பொதுமக்களும், சமாஜ்வாதி கட்சியினரும் கண்காணிக்க வேண்டும்" என அகிலேஷ் யாதவ் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com