\
வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிவிட்டு எப்படி பேரம் பேசமுடியும் - திருமாவளவன்!

வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிவிட்டு எப்படி பேரம் பேசமுடியும் - திருமாவளவன்!

வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிவிட்டு எப்படி பேரம் பேசமுடியும் - திருமாவளவன்!
Published on

"வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிவிட்டு எப்படி பேரம் பேசமுடியும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளில் அக்கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றது. இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று விசிக தரப்பில் திமுகவிடம் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் 6 தொகுதிகள் என்றே முடிவானது.

இதுகுறித்து பேசிய திருமாவளவன், “5 ஆண்டாக திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வந்தோம். எனக்கு பேரம் பேசும் வலிமை இல்லை. அதிமுக, பாஜகவுடன் போக முடியும் என எண்ணி இருந்தால் இதைக்காட்டி பேரம் பேசியிருக்க முடியும். வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிய பிறகு எனக்கு பேரம் பேச தெரியாது. நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை, 6 எம்.எல்.ஏக்களை வாங்கியுள்ளோம்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com