\
டிடிவி எங்களை எப்படி நீக்க முடியும்?: தங்கமணி கேள்வி

டிடிவி எங்களை எப்படி நீக்க முடியும்?: தங்கமணி கேள்வி

டிடிவி எங்களை எப்படி நீக்க முடியும்?: தங்கமணி கேள்வி
Published on

கட்சி பதவியில் இல்லாத தினகரன் கட்சியில் உள்ளவர்களை எவ்வாறு நீக்க முடியும் என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல்லை அடுத்த கருப்பட்டிபாளையத்தில் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற இருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான, கால்கோள் விழா இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சட்டமன்ற, நா‌டாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர் தங்கமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்‌ற உறுப்‌பினர்கள் என அனைவரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம் என்றார். கட்சி பதவியில் இல்லாத தினகரன் கட்சியில் உள்ளவர்களை எவ்வாறு நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com