பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் ? அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேசும் வீடியோ வெளியீடு

பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் ? அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேசும் வீடியோ வெளியீடு

பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் ? அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேசும் வீடியோ வெளியீடு
Published on

வேலூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத், பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிய காட்சி வெளியாகியுள்ளது.

கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதேசமயம் ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளில் திட்டமிட்டப்படி நாளை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத், பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிய காட்சி வெளியாகியுள்ளது. அதில், ஏசி சண்முகத்துக்கு வாக்களிப்போருக்கு பணம் சேர வேண்டும் என தெரிவிக்கும் கோவி சம்பத், ஒரு ஓட்டுக்கு ரூ.500 தரலாம் என பேசுகிறார். அத்துடன் எப்படி பண விநியோகம் செய்வது குறித்து விரிவான அறிவுரையும் வழங்குகிறார். 

இதனிடையே பண விநியோக வீடியோ குறித்து கோவி சம்பத் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ உடல்நலமின்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் ஓய்வில்தான் இருக்கிறேன். பழைய வீடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ளனர். திட்டமிட்டு எதிர்க்கட்சியினர் இதனை வேண்டுமென்றே செய்துள்ளனர்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com