டிரெண்டிங்
இல்லத்தரசிகளும் அரசியலுக்கு வர வேண்டும்... தமிழிசை வலியுறுத்தல்
இல்லத்தரசிகளும் அரசியலுக்கு வர வேண்டும்... தமிழிசை வலியுறுத்தல்
திரைப்படத்தில் வருவது போல மூன்று மணி நேரத்துக்குள் நிஜத்தில் முதமைச்சராகவோ, பிரதமராகவோ முடியாது என தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் 'மக்களோடு தீபாவளி' என்ற நிகழ்ச்சி பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, பொதுமக்களுடன் மியூசிக்கல் சேர், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுகளை விளையாடினார்.
தொடர்ந்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்த சவுந்தரராஜன், நடிகர்களே அரசியலுக்குள் நுழைந்து சாதிக்க முயற்சி எடுக்கும் நிலையில், பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் வீட்டு நிர்வாகத்தை சிறப்பாக கவனித்து வரும் பெண்களும் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர்களால் அரசியலில் சாதிக்க முடியும் எனவும் கூறினார்.