\
பரப்புரையில் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த ஒசூர் அதிமுக வேட்பாளர்

பரப்புரையில் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த ஒசூர் அதிமுக வேட்பாளர்

பரப்புரையில் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த ஒசூர் அதிமுக வேட்பாளர்
Published on: 

ஒசூர் மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகஅளவில் வசிக்கக்கூடிய பகுதியில் அதிமுக வேட்பாளர் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாநகர பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒசூர் மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகஅளவில் வசிக்கும் இமாம்பாடா, கும்பார் பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இஸ்லாமிய பெண்களிடம் உருது மொழியில் பேசிய வேட்பாளர் ஜோதி, அதிமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர், அமைதியான ஆட்சியை மீண்டும் வழங்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும்.

ஒசூர் மாநகரில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படும், இரவு, பகல் நேரங்களில் மகளிர் போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்கள் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com