டிரெண்டிங்
சாக்கடை குழியில் விழுந்த குதிரை: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்
சாக்கடை குழியில் விழுந்த குதிரை: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்
சத்தியமங்கலத்தில் சாக்கடை குழியில் விழுந்து சிக்கித் தவித்த குதிரையை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.
சத்தியமங்கலம் பாக்கியலட்சுமி நகர் பகுதியில் நூலகம் உள்ளது. அதன் அருகே இன்று அதிகாலை சாக்கடை நீர் தேங்கி இருந்த குழியில் குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது. குழியிலிருந்து மேலே ஏற முடியாமல் குதிரை தவித்துக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சாக்கடை குழியில் சிக்கித் தவித்த குதிரையை சுமார் அரை மணிநேரம் போராடி கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். சாக்கடை குழியில் சிக்கி உயிருக்கு போராடிய குதிரையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.