மெர்சலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்டம்: திரையரங்குகள் முன் போலீசார் பாதுகாப்பு

மெர்சலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்டம்: திரையரங்குகள் முன் போலீசார் பாதுகாப்பு
மெர்சலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்டம்: திரையரங்குகள் முன் போலீசார் பாதுகாப்பு

மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக திரையரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு நடுவே மெர்சல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி 200 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மெர்சல் திரைப்படத்தில் படத்தில் மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் விஜய் பேசியுள்ளார். இதை விஜய் உள்நோக்கத்துடன் பேசியதாகவே நாங்கள் கருதுகிறோம். உடனடியாக இந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இந்த நிலையில், திருச்சி, கடலூர், கன்னியாகுமரியில் மெர்சல் படத்திற்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் பிரபல திரையரங்கம் முன் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com