ஹிமாச்சல் தேர்தலில் பாஜகவுக்கு மித மிஞ்சிய தன்னம்பிக்கை: காங்கிரஸ் விமர்சனம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா மித மிஞ்சிய தன்னம்பிக்கையில் பேசி வருவதாக என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஹமிர்பூர் தொகுதியிலிருந்து சுஜான்பூர் தொகுதிக்கு மாறியுள்ள அவர், அங்கு தனது பரம அரசியல் எதிரியான காங்கிரசின் ரஜிந்தர் ரானேவுடன் மோதுகிறார். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ரானே, காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பின்னர் காங்கிரசில் இணைந்த ரானே, தற்போது பிரேம் குமார் துமலை எதிர்த்துப் போட்டியிடுகிறார். தனிப்பட்ட செல்வாக்கு நிறைந்தவராக அறியப்பட்டுள்ள ராஜேந்தர் ரானேவை தோற்கடிப்பது துமலுக்கு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. சுஜான்பூர் தொகுதியில் ரானேவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும், பாரதிய ஜனதா மித மிஞ்சிய தன்னம்பிக்கையில் பேசி வருவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.