சென்னை: தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி நள்ளிரவில் வழிப்பறி கொள்ளை

சென்னை: தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி நள்ளிரவில் வழிப்பறி கொள்ளை
சென்னை: தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி நள்ளிரவில் வழிப்பறி கொள்ளை

சென்னை பாடியில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி நள்ளிரவில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பாடி டி.வி.எஸ் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் பணிமுடிந்து இரண்டு சக்கர வாகனத்தை பெட்ரோல் இல்லாமல் தள்ளிக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அம்பத்தூர் வழியாக 2 சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வெங்கட்ராமனின் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர். மயக்கமடைந்த வெங்கட்ராமன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொரட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் நள்ளிரவில் திருமுல்லைவாயலை சேர்ந்த உலகப்பன் என்பவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை அதே கும்பல் பறித்து சென்றுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிந்து கொரட்டூர், திருமுல்லைவாயல் போலீசார் வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com