\
சென்னை: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
Published on: 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

நேற்று பிற்பகல் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கிண்டி, திருவான்மியூர், மாம்பலம், கோயம்பேடு, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதனைத்தொடர்ந்து, நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.

முக்கிய பகுதிகளான சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இன்று சென்னையின் சில பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரபிக் கடல், மகாராஷ்டிரா கடல், மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com