\
பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்ற அமைச்சர் விஜயபாஸ்கர்!

பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்ற அமைச்சர் விஜயபாஸ்கர்!

பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்ற அமைச்சர் விஜயபாஸ்கர்!
Published on

பெண் செய்தியாளரிடம் ‘உங்க கண்ணாடி அழகா இருக்கு’ என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப காத்திருந்தனர். அதன்படி வெளியே வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து புதிய தலைமுறையின் பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 

அப்போது கேள்விக்கு உரிய பதிலைக் கூறாமல் பெண் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “நீங்கள் ரொம்ப அழகாயிருக்கீங்க. நீங்கள் அணிந்துள்ள கண்ணாடி ரொம்ப அழகாக உள்ளது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கு மூத்த தலைவர்கள் உள்ளனர்” என்று கூறினார். மேலும் இறுதியாக அந்தப் பெண் செய்தியாளரை திரும்பிப் பார்த்து ‘நீங்க அழகாயிருக்கீங்க’ ‘அழகாயிருக்கீங்க’ ‘அழகாயிருக்கீங்க’ என்று மூன்று முறை தொடர்ந்து கூறினார். இந்தச் சம்பவம் தற்போது ஊடங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com