“நான் ஆர்சிபி அணியில் இருந்திருந்தால் யஸ்வேந்திர சாஹலை விடுவிப்பதை நான் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன். ஐபிஎல் 2022 இல் அவர் இல்லாதது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய இழப்பு” என்று சேவாக் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், புதிய கேப்டனாக பாஃப் டூ பிளசிஸ் நியமிக்கப்பட்டார். எல்லா அணிகளையும் போலவே பல வீரர்களை புதிய ஏலத்தில் எடுத்த போதிலும், சில முக்கிய வீரர்களை அந்த அணியால் தக்கவைக்க முடியாமல் போய்விட்டது. கோலி, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தக்க வைத்தது.
ஹர்ஷல் படேல் உட்பட சில வீரர்களை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தாலும், மெகா ஏலத்தில் லெக்-ஸ்பின்னர் யஸ்வேந்திர சாஹலை எடுக்காமல் தவறவிட்டனர். சாஹல் எட்டு ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். சாஹல் RCB அணிக்காக 114 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், சாஹலை ஏலத்தில் எடுக்காத ஆர்சிபி அணியின் முடிவில் திருப்தி அடையவில்லை. இந்த சீசனில் லெக் ஸ்பின்னரின் சேவைகளை அந்த அணி இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார். “ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய இழப்பு யஸ்வேந்திர சாஹல். பெங்களூரு அல்லது துபாய் போன்ற சிறிய ஆடுகளங்களில் அவர் சிறந்த வீரராக இருந்தார். அந்த மைதானங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்த மைதானங்களில் அவர் மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக இருந்தார். நான் RCB இன் ஒரு பகுதியாக இருந்திருந்தால், எந்த நிலையிலும் சாஹலை விட்டுவிடுவது பற்றி நான் நினைத்திருக்க மாட்டேன், ”என்று சேவாக் கூறியுள்ளார்.