டிரெண்டிங்
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு குமாரசாமி கடிதம்
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு குமாரசாமி கடிதம்
காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் வாஜுபாயி வாலாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
தங்கள் கட்சி தலைமைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெங்களூருவில் தேவகவுடா இல்லம் முன்பு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தொடண்டர்கள் குவிந்தனர். தேவகவுடா இல்லத்தில் தேவகவுடா, குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாலை 5.30 மணியளவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை யாரையும் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆளுநரை சந்திக்க எடியூரப்பாவும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

