ஹாட்ரிக் தோல்வியால் துவண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ்! - ஃபார்முக்கு திரும்புவாரா கிறிஸ் கெயில்?

ஹாட்ரிக் தோல்வியால் துவண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ்! - ஃபார்முக்கு திரும்புவாரா கிறிஸ் கெயில்?
ஹாட்ரிக் தோல்வியால் துவண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ்! - ஃபார்முக்கு திரும்புவாரா கிறிஸ் கெயில்?

ஐபிஎல் தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பையை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் அடுத்தடுத்த 3 தோல்விகளால் துவண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

களமிறங்கிய முதல் போட்டியில் மட்டும் வெற்றி, அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வி. இது தான் பெயரை மாற்றி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் நடப்பு சீசன் நிலைமை. சீசனின் தொடக்கத்தில் பேட்டிங்கில் அதிரடிகளைக் காட்டிய பஞ்சாப் அணி அதன் பின்னர் பெரிதளவில் சோபிக்கவில்லை. முன்வரிசை பேட்டிங்கில் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் சொல்லும்படியான அளவிற்கு ஃபார்மில் இல்லை.

பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட யுனிவர்ஸ் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்லுக்கும் நடப்பு சீசன் மகிழ்ச்சிகரமான ஒன்றாக இல்லை. கடந்த சீசனில் அணிக்கு பெரும் வலிமையாக பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரனுக்கு நடப்பு சீசனில் அதிர்ஷ்டம் ஒரு போட்டியில் கூட கை கூடவில்லை. முன்வரிசையில் உள்ள இந்த 4 வீரர்களும் மோசமான ஃபார்மில் இருப்பது அணிக்கு சோதனையே.

மத்திய வரிசையில் தீபக் ஹூடா ஓரளவு ஆறுதல் அளிக்கிறார். அதிரடி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஷாரூக்கான் பஞ்சாப் அணியை சரிவிலிருந்து மீட்கும் அஸ்திரமாக பலம் சேர்த்து வருகிறார். ஒரே ஒரு போட்டியில் களமிறங்கியுள்ள ஃபேபியன் ஆலன் மற்றும் ஹென்ரிக்கஸ் ஆறுதலான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அனுபவ வீரர் முகமது ஷமி பெரிதளவில் சோபிக்காதது பெரும் பின்னடைவே. இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் சராசரியான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருவது ஆறுதல். சுழற்பந்து வீச்சில் ஃபேபியன் ஆலன், முருகன் அஸ்வின், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் நம்பிக்கை. மற்றொரு ஆல்ரவுண்டர் ஹென்ரிக்கஸ் பந்து வீச்சிற்கு கூடுதல் பலம்.

உலகின் நம்பர் ஒன் இருபது ஓபர் பேட்ஸ்மேனான டேவிட் மலனை பஞ்சாப் அணி ஒரு போட்டியில் கூட களமிறக்காமல் இருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் பேட்டிங் முன் வரிசையில் பூரன் அல்லது கிறிஸ் கெய்லுக்கு மாற்றாக டேவிட் மலான் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com