டிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு 

டிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு 

டிக் டாக் பிரபலத்திற்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு 
Published on

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட டிக் டாக் பிரபலமான சோனாலி போகட்டிற்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், ஹரியானா பாஜக சார்பில் நேற்று 12 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்தப் பட்டியலில் டிக் டாக் பிரபலமான சோனாலி போகட்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஹரியானா மகிளா மோர்சா அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார் சோனாலி. டிக் டாக் செயலில் இவரது வீடியோ மிகவும் பிரபலமானவை. 

பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றதை அடுத்து, அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த டிக் டாக் வீடியோக்களை பலரும் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை சிலர் விமர்சித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com