தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார்

தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார்

தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார்
Published on

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் படேல். பட்டேல் இன மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறித்தி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தவர் ஹர்திக் படேல். இளைஞரான இவரது போராட்டம் குஜராத்தை ஸ்தம்பிக்க வைத்ததோடு நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தின் மூலமாக குஜராத்தில் பெரும் சக்தியாக உருவெடுத்த ஹர்திக் படேல் கடந்த முறை குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது காங்கிரசுக்கு ஆதரவளித்தார். இதனால் பாஜகவுக்கு பல தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சுரேந்தரநகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் ஹர்திக் படேல். அப்போது திடீரென்று மேடை யேறிய ஒருவர், மைக்கில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் படேலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த காங்கிர ஸ் கட்சியினர், அவரை பிடித்து அடித்து உதைத்தனர். அவர் யார், எதற்காக இப்படி செய்தார் என்பது உடனடியா கத் தெரியவில்லை. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பின்னர் இது தொடர்பாக சுரேந்தர்நகர் காவல் நிலையத்தில் ஹர்திக் படேல் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com