வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன: ஹர்திக் படேல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன: ஹர்திக் படேல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன: ஹர்திக் படேல்
Published on

குஜராத்தின் எந்த தொகுதிகளில் 1,000 அல்லது 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயமாகிறதோ அங்கெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக பட்டிதார் இனத் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட 52 கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 1,828 பேர் இதில் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பட்டிதார் அமைப்பின் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருந்தார். அத்துடன் பல இடங்களிலும் களத்திற்கு சென்று பாஜகவிற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நேற்று சோம்நாத் கோயிலில் ஹர்திக் பிரார்த்தனை செய்தார். அப்போது பேசிய அவர், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக தம்முடைய முந்தைய குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்தார். எந்தத் தொகுதிகளில் வெற்றி தோல்வி 1,000 அல்லது 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் நிர்ணயிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் குஜராத் தேர்தலில் நேர்மையான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தால் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com