முதல் போட்டியில் வெற்றிபெற இந்த அணிக்குதான் சான்ஸ் அதிகம்- சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்

முதல் போட்டியில் வெற்றிபெற இந்த அணிக்குதான் சான்ஸ் அதிகம்- சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்
முதல் போட்டியில் வெற்றிபெற இந்த அணிக்குதான் சான்ஸ் அதிகம்- சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்

சென்னை - கொல்கத்தா அணிகளுக்கிடையேயிலான முதல் போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியே வெல்லும் என்று, அந்த இரு அணிகளின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

15-வது சீசனுக்காக ஐபிஎல் டி20 போட்டி இன்று துவங்கி, மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கும் முதல் சூப்பர் லீக் போட்டியில், முதன்முறையாக ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், இந்தப் போட்டியில் இளம் வீரர்களை கொண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் வாய்ப்பே அதிகம் இருப்பதாக, இந்த இரு அணிகளிலும் விளையாடிய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கொல்கத்தா அணியில் இளம் வீரர்களை கொண்டுள்ளது. அந்த அணியில் திறமையான வீரர்கள் உள்ளதாக நினைக்கிறேன். கொல்கத்தா அணி, தரமான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன், நல்ல ஹிட்டர்களைக் கொண்டுள்ளது. இதனால் கேகேஆர் அணி, சிஎஸ்கே அணியை வீழ்த்தும் என நினைக்கிறேன்.

இரு அணிகளுக்கும் தனி இடம் உண்டு. நான் இந்த அணிகளுக்காக விளையாடும்போது, இரு அணிகளுமே என்னை நன்றாக கவனித்துக்கொண்டன. நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது ரசிகர்கள் தங்களது அன்பை என்மீது பொழிந்தனர். நான் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்தேன்.

ஃபிட்னஸ் பிரச்னையால் அதிகம் விளையாடாவிட்டாலும், முடிந்தவரை அவர்களுக்கு மனதளவில் உதவ முயற்சித்தேன். இரண்டு அணிகளுமே எனக்கு அபரிமிதமான அன்பைக் கொடுத்தன. ஆனால், வெற்றிபெறும் ஒரு அணியை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், நான் கேகேஆர் அணியை தான் தேர்ந்தெடுப்பேன். வெற்றி பெற சரியான அணி என்றால் அந்த அணி தான்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேபோல் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும், ஹர்பஜன் கூறியது போன்றே, கொல்கத்தா அணி வெற்றியுடன் ஐபிஎல் போட்டியை துவங்கும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com