இந்த தாடியா, அந்த தாடியா? - கமல்ஹாசன் கேள்வி

இந்த தாடியா, அந்த தாடியா? - கமல்ஹாசன் கேள்வி
இந்த தாடியா, அந்த தாடியா? - கமல்ஹாசன் கேள்வி

லேடியா, அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப்போல இந்த தாடியா, அந்த தாடியா என நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் திருச்சி பரப்புரையில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சி மலைக்கோட்டையில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அங்கு பேசிய அவர், ’’லேடியா, அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப்போல இந்தத் தாடியா, அந்த தாடியா என நான் கேட்கிறேன். பாஜக எனக்கு பணம் கொடுப்பதாக கூறுகின்றனர்; ஆனால் நான் பாஜகவை எதிர்த்து போட்டியிடுகிறேன். ஏழைகளின்மீது எனக்கு கோபம் இல்லை; ஏழ்மையின் மீதுதான் கோபம் வருகிறது. நேர்மையை நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது அவர்களுக்கு குமட்டலாக உள்ளது. காமராஜர், அப்துல்கலாமை போன்று வரவேண்டும் என சொல்லி வளர்க்கப்பட்டவன் நான்’’ என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com