தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹெச். ராஜா, ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பதை விட்டுவிட்டு ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம் என தெரிவித்துள்ளார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஸ்டாலின் அஞ்சுவது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார்.