டிரெண்டிங்
ஹெச்.ராஜா கருத்து பாஜக கருத்தல்ல - முரளிதர ராவ்
ஹெச்.ராஜா கருத்து பாஜக கருத்தல்ல - முரளிதர ராவ்
ஹெச்.ராஜா கருத்து பாஜகவின் கருத்தல்ல என பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தமிழக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த சர்ச்சை ட்விட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் கிளம்பின.
இதற்ககு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூசகமாக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இச்சர்ச்சை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர ராவ், ‘ஹெச்.ராஜா கருத்து பாஜகவின் கருத்தல்ல’ என பதிவிட்டுள்ளார்.