ஹெச்.ராஜா ட்விட்டரில் கூறியிருந்த கருத்திற்கு சுப. வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா “இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண், அடியே மீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண். ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்” என கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் சுப வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் “பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல் வரப்போவதாக எண்ணி மகிழ்கிறார் ஹெச்.ராஜா. இவ்வளவு காலத்திற்குப் பிறகேனும் இது பெரியார் மண் என்பது அவருக்குப் புரிந்ததே என்பதை எண்ணி மகிழ்கிறோம் நாம்!” என குறிப்பிட்டுள்ளார். அதனை ரீ ட்விட் செய்த ராஜா, “இது பெரியார் மண் என்று நான் கூறவில்லை. அதைத்தொடர்ந்து நீங்கள் கூறியுள்ள அனைத்தும் குறிப்பிட்டுள்ளேன். அவை அனைத்தையும் ஒப்புக் கொண்டது வரவேற்கத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார்.