குஜராத் தேர்தல் முடிவுகள்: சமநிலையில் பாஜக, காங்கிரஸ்
குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு முன்னிலையை நோக்கி செல்கின்றன.
குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிகமான இடங்களை பாஜகவே கைப்பற்றும் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இரண்டு கட்சிகளும் சமமான போட்டியில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் குஜராத் வெற்றியை பொறுத்த, வரும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் அமையும் என தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி பாஜக 83 இடங்களிலும், காங்கிரஸ் 82 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.