டிச.18க்கு முன் குஜராத் சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டிச.18க்கு முன் குஜராத் சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டிச.18க்கு முன் குஜராத் சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Published on

இமாச்சல சட்டசபை தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இமாச்சல பிரதேசத்துக்கு நவம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவும், டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். டிசம்பர் மாநிலத்திற்கு 18-ம் தேதிக்குள் குஜராத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, குஜராத் மாநில தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் தேர்தல் நடத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தகவலை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு, அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் தற்போது நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆனந்தி பென் தலைமையிலான பாஜக ஆட்சி ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று குஜராத் மாநிலத்தை தக்க வைக்க பாஜக பல்வேறு யூகங்களை கையாண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் குஜராத் சட்டசபையை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com