\
GTA - 6 போஸ்டர்
GTA - 6 போஸ்டர்REUTERS

GTA - 6 செய்யும் மேஜிக்! காதல் மழை பொழியும் துணைகள்... இணையத்தை நிரப்பும் பெண்களின் பதிவுகள்

GTA - 6 கேமை விளையாடத் தொடங்கிய பின் தங்கள் துணைகள் மாறி வருவதாக பெண்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் அது சாத்தியம் தானா?... என்ன மாதிரியான மாற்றங்களை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்?... பார்க்கலாம்...
Published on: 

GTA - 6 Fever இன்னும் இணையத்தில் இருந்து முழுமையாக அகலவில்லை. 13 ஆண்டுகள் கழித்து ஜிடிஏ கேமின் புதிய வெர்ஷன் வெளிவந்திருக்கும் நிலையில், நீண்ட நாட்களாக காத்துக் கிடந்த கேமர்கள், ஜிடிஏ பிரியர்கள், கேமின் ஒவ்வொரு பாகத்தையும், அக்குவேர் ஆணிவேராக பிரித்து எக்ஸ்ப்ளோர் செய்து வருகின்றனர். வெளியுலகில் செய்ய முடியாத சிறு சிறு குற்றங்களே வைஸ் சிட்டி, ஜிடிஏ-ன் முக்கிய பின்னணி. 1930-களில் வாழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட தம்பதியான போனி மற்றும் கிளைட் (Bonnie and Clyde) ஆகியோரை இன்ஸ்பயர் செய்து இந்த முறை வெளியான ஜிடிஏ கேமின் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஜிடிஏ வரலாற்றில் முதல்முறையாக ஜிடிஏ 6-ல் முதன்மை பெண் கதாபாத்திரமாக அறிமுகமாகியிருக்கிறாள் லூசியா. அவளுக்கு ஜோடியாக ஜேசன் வலம் வருகிறான்.

முன்பே குறிப்பிட்டதுபோல, இளம் வயதில் துடிப்பாக இருக்கும் இளைஞர்கள், குற்றப் பின்னணி கொண்ட இந்த கேமை விளையாடும்போது, ஆழ்மனதில் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், அப்படி இருந்த இளைஞர்கள் பலரையும், நிஜ உலகில் காதல்வயப்பட வைத்திருக்கிறதாக சொல்கின்றனர் பெண்கள் பலர். ஜிடிஏ 6-ல், லூசியா - ஜேசன் நடந்துகொள்ளும் விதம், பல ஆண்களையும் தங்கள் துணையை நன்றாக பார்த்துக் கொள்ள தூண்டியிருப்பதாக கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன. குற்ற உலகில், துரோகங்களுக்கு மத்தியில், அன்பு என்ற வார்த்தைக்கு பல நேரங்களில் இடமிருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் அன்புக்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்பதே பொதுவான முரணாக இருக்கும். ஆனால், அப்படிப்பட்ட உலகிலும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து, உணர்வுப்பூர்வமான பிணைப்புடன், நட்பாக செயல்பட்டு, சம்பவங்களை செய்வது லூசியா, ஜேசனின் கதாபாத்திரமாக காட்டப்பட்டிருக்கும். கேமில் இருவரும் இணைந்து, ஒன்றாக பயணிப்பதில் தொடங்கி, விஷயங்களை செய்து முடிப்பது வரை பல விஷயங்கள் கேமர்களை கவர்ந்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் பெண்கள் பலர், ஜிடிஏ - 6 விளையாடும் தங்கள் கணவர் அல்லது துணைகள், வீட்டு விஷயங்களில் அக்கறை காட்டுவதாகவும், வீட்டு வேலைகளை செய்வதாகவும், தங்களை கூடுதல் அக்கறையோடு பார்த்துக் கொள்வதோடு, காதல் மழை பொழிந்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் துணை ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பது, தன்னோடு நேரம் செலவிடுவது, பூங்கொத்து கொடுத்து சர்ப்ரைஸ் கொடுப்பது என பல விஷயங்களை செய்து தங்களை கவர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் இளம்பெண்கள் பலர்.