டிரெண்டிங்
ஜி.எஸ்.டி.யால் நன்மை, தீமை இரண்டுமே உள்ளது - தம்பிதுரை
ஜி.எஸ்.டி.யால் நன்மை, தீமை இரண்டுமே உள்ளது - தம்பிதுரை
மத்திய அரசு நடைமுறைப்படுத்திய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் நன்மை, தீமை இரண்டுமே உள்ளதாக அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவார்கள் என்று அவர் கூறினார். ஜி.எஸ்.டி. வரியால் நன்மைகள் இருந்தாலும், பட்டாசு உற்பத்தி பாதிப்பு போன்ற தீமைகளும் உள்ளன. இதுபோல் எந்தெந்த தொழில்களில் பாதிப்பு என்பதைக் கண்டறிந்து அவதற்காக, அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் என்று தம்பிதுரை கூறினார்.