\
ஜி.எஸ்.டி.யில் குறைகள் இருந்தால் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி

ஜி.எஸ்.டி.யில் குறைகள் இருந்தால் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி

ஜி.எஸ்.டி.யில் குறைகள் இருந்தால் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி
Published on

ஜி.எஸ்.டி.யில் குறைகள் இருந்தால் அதனை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஏழை எளிய மக்களை பாதிக்காது என்று அவர் கூறினார். மேலும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து வணிகர்களுக்கு குறைகள் இருந்தால் அதை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி உரிய மாற்றங்கள் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com