அரசியல் கட்சிகளின் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை - பசுமை தீர்ப்பாயம் யோசனை

அரசியல் கட்சிகளின் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை - பசுமை தீர்ப்பாயம் யோசனை
அரசியல் கட்சிகளின் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை - பசுமை தீர்ப்பாயம் யோசனை

நெகிழி பொருட்களால் செய்யப்பட்ட கொடி, தோரணம் போன்ற பொருட்களை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்த தடை விதிக்க தேர்தல் ஆணையத்திடம் பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தேர்தல் காலங்களில் அனைத்து தொழிகளும் சூடு பிடித்துவிடும். ஒவ்வொரு கட்சியும் தங்கள் வெற்றிக்கான இலக்கை வைத்து இயங்குவர்.  ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த பேனர், சுவர் விளம்பரம், தட்டி, கட் அவுட் என எல்லா உபாயங்களையும் பயன்படுத்துவர். 

தொகுதிகளில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம், பொதுக்கூட்டம், கூட்டணி கட்சிகளின் மொகா கூட்டம் என எல்லா நாளும் தேர்தல் பரபரப்பை காணலாம். ஒவ்வொரு கட்சியின் கொடியும் தோரணமும் வீதிகளை ஆக்கிரமித்துவிடும். இந்தத் தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்படும் கொடி, தோரணங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆனவை. அதிகம் அந்த ரக கொடிகளே கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. துணிக் கொடிகளைவிட பிளாஸ்டிக் கொடிகள் குறைந்த செலவை பிடிக்கும் என்பதால் கட்சி பேதமின்றி அனைவரும் அதனையே பயன்படுத்துவர்.   

இந்நிலையில் பசுமை தீர்ப்பாயம் தேர்தல் ஆணையத்திடம் ஒரு அறிவுறுத்தலை முன்வைத்துள்ளது. அதில் “தேர்தல் பிரச்சாரத்தில் நெகிழி பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கவேண்டும். இதனைத் தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவை கூட்டாக சேர்ந்து ஆலோசித்து முடிவெடுக்க முன்வர வேண்டும்” எனக் கூறியுள்ளது. 

இந்த அறிவுறுத்தலை தேர்தல் பிரச்சாரத்தில் உபயோகப்படுத்தும் நெகிழி பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை விசாரித்த போது பசுமை தீர்ப்பாயம் முன்வைத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம், மத்திய அரசு உள்ளிட்ட குழு முடிவு எடுக்கவேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com