\
75 வயதில் டாக்டரேட்.. காதல் ததும்ப ஃபோட்டோஷூட் செய்த தாத்தா-பாட்டி.. நெகிழ்ச்சி வீடியோ!

75 வயதில் டாக்டரேட்.. காதல் ததும்ப ஃபோட்டோஷூட் செய்த தாத்தா-பாட்டி.. நெகிழ்ச்சி வீடியோ!

75 வயதில் டாக்டரேட்.. காதல் ததும்ப ஃபோட்டோஷூட் செய்த தாத்தா-பாட்டி.. நெகிழ்ச்சி வீடியோ!
Published on

தாத்தா பாட்டிகள் சந்தோஷமாக இருப்பதை கண்டு ரசிக்காத பேரன் பேத்திகளே இருக்க முடியாது. அதுவும் வயது மூப்பை அடைந்தாலும் அவர்களுக்கு இருக்கும் உழைக்கும் ஆற்றலை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது.

ஆனால் 75 வயதில் ஒருவர் படித்து பட்டம் பெற்றதோடு டாக்டரேட்டும் வாங்கியிருக்கிறார் என்றால் எத்தனை மகிழ்ச்சியான ஆச்சர்யமான விஷயமாக இருக்கக் கூடும்? உண்மைதான்.

நானி என்ற பெண்ணின் 75 வயதுடைய தாத்தா டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறார். அவரை கொண்டாடும் வகையில் ஃபோட்டோ ஷூட்டும் நானி எடுத்திருக்கிறார். அதில் நானியின் தாத்தாவும் பாட்டியும் அன்பு பொங்க போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by sikhexpo.com ✪ (@sikhexpo)

இது தொடர்பான வீடியோவும், ஃபோட்டோவும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளதை அடுத்து தற்போது அது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை Sikhexpo என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும் ஷேர் செய்ததோடு, “இதுதான் உலகிற்கு தேவையாக இருக்கிறது.

அபரிமிதமான காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஃபோட்டோ ஷூட் அற்புதமாக இருக்கிறது. டாக்டரேட் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துகள்” எனக் கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் பூரித்து போயிருக்கிறார்கள்.

மேலும் “அவர்களை போலவே நானும் வாழ வேண்டும்” என பயனர் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். இதேபோல, இத்தனை வயதாகியும் படித்து பட்டம் பெற்றிருக்கும் “இந்த தாத்தாவின் கடின உழைப்பு படிக்கும் பலருக்கும் ஒரு உந்துதலாக இருக்கும்” என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com