“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை

“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை
“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மோடி மற்றும் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று பாஜக கூட்டணி வெற்றிப் பெறவுள்ளது. இதற்காக டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது அமித் ஷா உரையாற்றினார். அதில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மணமார்ந்த நன்றி. இது மோடி அரசின் சிறப்பான கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. ஏனென்றால் இந்திய தேர்தல் வரலாற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி இரண்டு முறை தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. பாஜகவிற்கு எதிராக சந்திரபாபு நாயுடு கூட்டணி சேர்க்க முயற்சிக்காமல் சரியாக பிரச்சாரம் செய்திருந்தால் அவர் ஆந்திராவில் ஒரு தொகுதியிலாவது வெற்றிப் பெற்றிருப்பார். அதேபோல மேற்குவங்கத்தில் 18 இடங்களை பாஜக வென்றுள்ளது. இனிவரும் தேர்தல்களில் பாஜக மேற்குவங்கத்திலும் பலத்தை நிரூப்பிக்கும்” எனத் தெரிவித்தார். 

இதனையடுத்து தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “பாஜகவை மீண்டும் ஆட்சியமைக்க வைத்ததற்கு தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. 2019ஆம் ஆண்டு தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க அளவில் மக்கள்  வாக்களித்துள்ளனர். 

இந்திய மக்களின் இந்தச் செயலை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றனர். இந்தத் தேர்தலில் வெற்றிப்பெற்றது வேட்பாளர்களோ அல்லது கட்சியோ இல்லை. உண்மையில் வெற்றிப் பெற்றது இந்திய மக்கள் மற்றும் இந்திய குடியுரசும்தான். இதனால் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன். தனி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றிருந்தாலும் என்னுடைய ஆட்சி அனைவரையும் ஒன்றிணைத்த ஒன்றாகதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com