\
சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர்ராவ்

சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர்ராவ்

சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர்ராவ்
Published on

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக இன்று சென்னை வந்தார்.

அதிமுகவில் பிரிந்துள்ள இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் இன்று அவசரமாக சென்னை வந்தார். 

மும்பையில் அவரது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அணிகள் இணைப்பிற்கு பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஆளுநரின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் எனவும், துணை முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் இன்று பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது.

அணிகள் இணைப்பு இன்று மதியம் 12 மணிக்கே அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இரு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் சசிகலா நீக்கம் குறித்து உறுதியான முடிவை எடப்பாடி பழனிசாமி அணி எடுக்க வேண்டும் எனவும் அதற்குப் பின்னர்தான் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் அவசரமாகச் சென்னை வந்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com