டிரெண்டிங்
பரபரப்பான அரசியல் சூழலில் திங்கள்கிழமை சென்னை வருகிறார் ஆளுநர்
பரபரப்பான அரசியல் சூழலில் திங்கள்கிழமை சென்னை வருகிறார் ஆளுநர்
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கள்கிழமை சென்னை வர உள்ளார் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க கோருவது தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்திருந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் உயர்நீதிமன்றத்தில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கள் கிழமை சென்னை வர உள்ளதாக தெரிவித்தார்.
ஆளுநர் வித்யாசாகர்ராவ் கடந்த திங்கள்கிழமை மும்பை சென்றிருந்த நிலையில், அங்கு ஒரு வாரம் அலுவல்களை கவனித்த பின் மீண்டும் சென்னை திரும்புகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு உத்தரவிடுமாறு ஆளுநருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் சூழலில் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

