\
சிவகங்கை: அகரம் தொல்லியல் ஆராய்ச்சியில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு..!

சிவகங்கை: அகரம் தொல்லியல் ஆராய்ச்சியில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு..!

சிவகங்கை: அகரம் தொல்லியல் ஆராய்ச்சியில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு..!
Published on

கீழடி அருகேயுள்ள அகரம் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியில் 17-ஆம் நூற்றாண்டின் தங்க நாணயம் கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பண்டைய கால தமிழர்களின் வரலாறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து கீழடியைச் சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை விரிவான அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அகரம் ஊரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் உள்ளது. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இந்த நாணயம் புழக்கத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும், நடுவில் சூரியனும், அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின் பக்கம் 12 புள்ளிகளும், அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com