காணாமல்போன 5 வயது சிறுவன்: ஒருமணி நேரத்தில் மீட்ட கோபி மகளிர் போலீஸ்

காணாமல்போன 5 வயது சிறுவன்: ஒருமணி நேரத்தில் மீட்ட கோபி மகளிர் போலீஸ்

காணாமல்போன 5 வயது சிறுவன்: ஒருமணி நேரத்தில் மீட்ட கோபி மகளிர் போலீஸ்
Published on

கோபிசெட்டிபாளையம் பஜனைகோயில் வீதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரது 5 வயது மகனை காணவில்லை என கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஒருமணி நேரத்தில் சிறுவனை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஜனை கோயில் வீதியில இரு குழந்தைகளுடன் வசிப்பவர் பேச்சியம்மாள். இவரது இளையமகனான 5 வயது சிறுவன் சந்துரு பெற்றோர் திட்டயதால் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெறியேறியுள்ளார். சிறுவனைக் காணாத தாய் பேச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் பலஇடங்களில் தேடியுள்ளனர் கிடைக்காமல் போகவே கோபிசெட்டிபாளையம் அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பேச்சியம்மாள் கொடுத்த .புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக அனைத்து மகளிர் காவல்துறையினர் கோபிசெட்டிபாளையம் நகர் பகுதியில் சிறுவனைத்தேடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அரசுபோக்கு வரத்துக்கழக பணிமணையின் பின்புறம் ஒருசிறுவன் வழிதெரியாமல் நின்று கொண்டுள்ளதாக கிடைத்த தகவல் அடுத்து இங்கு சென்ற காவல்துறையினர் சிறுவனை மீட்டு காவல்நிலையம் அழைத்துவந்து விசாரித்ததில ;காணாமல்போன பேச்சியம்மாளின் மகன் சந்துரு என்பது தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து பேச்சியம்மாளை அழைத்து சிறுவனை ஒப்படைத்தனர். மேலும் குழந்தைகளிடம் கனிவுடனும் பாசமாகவும் இருக்க வேண்டும் என்றும் குழைந்தைகளை அடிக்கவோ அதட்டவோ கூடாது என்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

சிறுவனுக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் பலூன்கள் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தினர். காணாமல்போன சிறுவனை ஒருமணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்த அனைத்து மகளிர் காவல்துறையினரை உயர்அதிகாரிகளும் காவல் துறையினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com