இந்தியாவின் முக்கியமான சுற்றுலா மாநிலத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை! காரணம் இதுதான்!

வடமாநிலங்களில் அல்லது சுற்றுலா செல்லும் இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கண்டிப்பாக கோபி மஞ்சூரியன் உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் .
gobi manchurian
gobi manchurianPT
Published on

ஹோட்டல்களில் விஷேச தினங்களில் உணவில் இடம் பெரும் ஒரு முக்கியமான உணவு வகைகளில் ஒன்று கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian). காளிஃப்ளவரில் செய்யப்படும் இத்தகைய உணவின் சுவை மிகவும் அலாதி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று.

குறிப்பாக வடமாநிலங்களில் அல்லது சுற்றுலா செல்லும் இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கண்டிப்பாக கோபி மஞ்சூரியன் உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் .

கோபி மஞ்சூரியன்
கோபி மஞ்சூரியன்PT

இது இப்படி இருக்க... கோவா இந்தியாவில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று என்று நமக்கு தெரியும். வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் விடுமுறையை கழிக்க அனேக மக்கள் கூடும் இடம் கோவா. இங்கு வரும் வெளிநாட்டினரின் விருப்பப்பட்டியலில் இடம்பெரும் இந்திய உணவில் கோபி மஞ்சூரியனும் ஒன்று. கோபி மஞ்சூரியனுக்கென்று ஒரு ரசிக பட்டாளமே உண்டு. இது இப்படி இருக்கையில்,

கோவாவின் மபுசா பகுதியில் விற்பனையாளார்கள் சுகாதாரமற்ற முறையில் கோபிமஞ்சூரியன் தயாரிப்பதுடன், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்களை அதில் உபயோகப்படுத்துவதாக கூறி உணவு பாதுகாப்பு துறை அதற்கு தடை விதிக்க முடிவுசெய்துள்ளது. மபுசா முனிசிபல் கவுன்சில், சமீபத்தில் ஸ்டால்கள் மற்றும் பிறவிருந்துகளிலிருந்து இந்த உணவை தடை செய்த போது அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது.

முன்னதாகவே, கோபி மஞ்சூரியன் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதால் பலருக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டதாக புகார்கள் முன்வைக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை சார்பில் முன்னதாகவே தடை செய்யப்பட்டுள்ள சாஸ் உபயோகம் செய்ய கூடாது, நிறமிகளை அதிகம் உபயோகம் செய்ய கூடாது என அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால், அவை யாராலும் கடைபிடிக்கப்படவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே... கோபிமஞ்சூரியன் பிரியர்கள் கோவா சென்றால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com