முருங்கைக்கீரையுடன் வந்து காரில் ஆடுகளை திருடிய கும்பல்.. கைது செய்த போலீசார்.!

முருங்கைக்கீரையுடன் வந்து காரில் ஆடுகளை திருடிய கும்பல்.. கைது செய்த போலீசார்.!
முருங்கைக்கீரையுடன் வந்து காரில் ஆடுகளை திருடிய கும்பல்.. கைது செய்த போலீசார்.!

வந்தவாசியில் காரில் ஆடுகளை கடத்திய 4 பேர் கைது. 12 ஆடுகள் ஒரு கார் ஒரு இருசக்கர வாகனத்தை வந்தவாசி போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த ஆடுகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருடு போனது. இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் இது சம்பந்தமாக வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது யாதவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்ம நபர் நான்கு பேர் கையில் முருங்கைக்கீரையை வைத்துக்கொண்டு அவ்வழியாக வரும் ஆடுகளுக்கு தீவனம் கொடுப்பது போல் காரின் அருகில் ஆடுகளை வரவழைத்து தூக்கி காரில் போட்டு திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.


இதையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காரின் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வந்தவாசி புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் காரில் ஆடுகள் இருப்பது தெரியவந்தது.

 பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் வந்தவாசியை அடுத்த கீழ் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளிக்கண்ணு, இவரது தம்பி முரளி, வந்தவாசி பெரிய காலனி பகுதியை சேர்ந்த சீனுவாசன், மங்கலம் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி ஆகியோர் ஆடுகளை திருடி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.


பின்னர், நான்கு பேரை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்த 12 ஆடுகள், கடத்துவதற்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com